Monday, November 28, 2016

நூல் அறிமுகம் : இலங்கையில் சாதியும் அதற்கெதிரான போரட்டங்களும் , வெகுஜனன் & இராவணா

நூல் அறிமுகம் 

இலங்கையில் சாதியும் அதற்கெதிரான போரட்டங்களும்
வெகுஜனன் & இராவணா
முதற்பதிப்பு     : 1989 – மார்ச்
இரண்டாம் பதிப்பு : 2007 – டிசம்பர்

ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளை போரட்டங்கள் மூலமாவே பெற்றுள்ளனர்.   வர்க்கத்தினால் ஒடுக்கப்பட்ட மக்கள் உழைக்கும் வர்க்கமாகவும் சாதியினால் ஒடுக்கப்பட்ட மக்கள் தாழ்த்ப்பட்டவர்களாகவும் உள்ளனர். உழைக்கும் வர்க்கம் சாதியினால் பிளவுபட்டுள்ளது என்பது எந்ந அளவு உண்மையோ அதைவிட உணமை பல்வேறு சாதி மற்றும் மதத்ததில் உள்ள உழைக்கும் மக்கள் வர்க்கமாக ஒன்றுபட்டு பல  போரட்டங்களை நடத்தி உள்ளனர் எனபது. இலங்கையில் சாதிய அடக்கு முறைக்கு எதிரான போரட்டங்களில் எவ்வாறு உழைக்கும் வர்க்க மக்கள் இயக்கங்கள் தாழ்த்ப்பட்ட மக்களோடு தோளோடு தோள் நின்று வெற்றி கண்டனர் என்பதின் பதிவே இப்புத்தகம். மார்ச் 1989-ல் வெளியிடப்பட்ட இப்புத்தகம் டிசம்பர்  2007-ல் மறுவெளியிடு செய்யப்படுள்ளது இன்றய வராலற்று தேவையே. இலங்கையின் சாதிய அமைப்பின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை சுருக்கமாகவும் அதேவேளை சாதிய ஒடுக்கு முறையின் உச்ச நிலையான தீண்டாமைக் கொடுமையை விரிவாகவும் பேசுகிறது.

இப்புத்தகத்தின் விபரங்களை 4 பிரிவாக பிரிகளாம். முதலவதாக இலங்கையில் சாதிய தோற்றமும் தன்மையும் விளக்கும் சில அதிகாரங்கள் இரண்டாவதாக 1900 ஆரம்ப காலங்களில் தொடங்கிய போரட்டங்கள் மற்றும் அதனுடைய தன்மை கிட்டத்தட்ட 1950 கள் வரை மூன்றவதாக 1950 முதல் 1966 அக்டோபர் 21 வரை நான்கவதாக 1966 க்கு பின்தைய நிலை.

1 - இலங்கையில் சாதிய தோற்றமும் தன்மையும் விளக்கும் சில அதிகாரங்கள் 

தென்இந்தியாவில் சுமார் கி.பி 10 ஆம் நூற்றாண்றில், சோழர் அட்சி காலத்தில், வேறுன்ற தொடங்கிய சாதிய அமைப்பு கி.பி 14 ஆம் நூற்றாண்று முதல் 18 ஆம் நூற்றாண்று வரையிலான விஜய நகர பேரரசு காலத்திலே முழுமை பெறுகிறது. இதன் தாக்கம் இலங்கையையும் பாதிக்கிறது. தமிழ் மற்றும் சிங்கள இனங்களிடையே சாதி பிரிவுகள் இருந்தாலும் தமிழ் இனங்களிடையே சாதியிய அடக்குமுறை அதிகமாக காணப்படுகிறது. கொய்கம, பத்தம, வகும்பர, கராவ, சலாகம, ஹினா, பெரவ, நவந்தன்ன ஆகியவை சிங்கள இனங்களிடையே காணப்படுகிற சாதிகளுக்குள் சில. சிங்கள இனங்களிடையே சாதியபடி நிலையில் ரொடியா சாதியானது சமுகத்தினின்று முற்றாக விலக்கி வைக்கப்பட்டு இழி நிலையிலுள்ள மக்களை கொண்டதாக்கப்பட்டது. பிற சாதியின்னிடையே நிலம் கல்வி போன்றவற்றில் அடிநிலைச் சாதிகளான பக்கம, ஹன்ன, பெரன போன்ற சமுகத்தினர் இன்ன்மும் பின்தங்கியள்ளவர்களாகவே உள்ள்னர். மலையகத்தமிழர்களை பொருத்தவரை 90 %  தாழ்த்ப்பட்ட சாதியினார்களாகவும் 10 % பிற சாதியினார்களாகவும் உள்ள்னர். அதில் 70% பறைகயர்களாகவும் 20 % எனைய தாழ்த்ப்பட்ட சாதியினாராக உள்ளனர். தாழ்த்ப்பட்ட மக்களில் பெறும்பானணோர் தொழிலாழிகளே அதே வேளை ஆங்கில கல்வியை ஓறளவிற்க்கு பெற்று தோட்டங்களில் சிறுசிறு வேலைகளில் சிலர் அமர்த்தப்பட்டணர், இவர்களில் பெறும்பானணோர் பறைகயர்களே.

தமிழ் இனங்களிடையே உள்ள் சாதிகள்
குடியானவர் சாதியினார் ( உயர் சாதியினார்)
தாழ்த்ப்பட்ட சாதியினார்
வேளாளர், மொட்டை வேளாளர், சோழிய வேளாளர் & சைவ வேளாளர்
ஆறு நாட்டு வேளாளர்
பள்ளர்
பறையர்
சக்கிலியர்
வண்ணார்
தமிழ் வண்ணார்
ரெட்டி வண்ணார்
தொட்டி வண்ணார்
அம்பட்டர்
கள்ளர், மறவர் & அகம்படியார் 
முக்குலத்தோர் ( தேவர் )
செட்டிமார்,
ரெட்டிமார், முத்துராஜா
நாயுடு & நாட்டார்
இவர்கள் எண்ணிக்கையில் மிகமிகக் குறைந்தவர்கள்


இந்தியாவில் உள்ள்து போல இலங்கையில் தாழ்த்ப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கிடு கிடையாது. இந்தியாவைப் போலவே இலங்கையிலும் தாழ்த்ப்பட்ட மக்கள் செருப்பு போட்டு நடந்ததர்க்கும் பொது சுடுகாட்டை உபயோகிதத்தர்க்கும் சாதிய சண்டைகள் நடந்து இருந்தன. ஆங்கிலய அட்சி காலத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் அவை உயர் சாதி வேளாளர்களின் கையில் இருந்ததால் கல்வி என்பது  தாழ்த்ப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டே இருந்தது. சிரி சோமகஸ்தா கல்லூரியில் 1976-ஆம் ஆண்டே முதல் தாழ்த்ப்பட்ட மாணவர் ஒருவர் சேர்க்கப்படுகிறார். பதிவு அலுவலங்களில் உயர் சாதி மக்களே வேலையில் இருந்ததால் தாழ்த்ப்பட்ட மக்கள் தங்கள் விரும்பிய பேரைக் கூட தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கமுடியவில்லை.


2 - 1900 ஆரம்ப காலங்களில் தொடங்கிய போரட்டங்கள் மற்றும் அதனுடைய தன்மை கிட்டத்தட்ட 1950 கள் வரை

இருபதாம் நூற்றாண்றின் முதல் இரு சதாப்தங்களில் தாழ்த்ப்பட்ட மக்கள்டையே ஒருவித வழிப்பனர்வு துளிர் விட ஆரம்பித்தது. 1910-ல் புத்தூர் சிறுப்பிடிக் கிராமத்தில் பருத்திதுறை பிரதான வீதியில் வசித்துவந்த வண்ணாண் குடும்பம் ஒரு வீடு கட்ட தீர்மானித்தது. அதையறிந்த வேளாளர் சாதியினார் , “வண்ணாண் கல் வீடு கட்ட முடியாது அதுவும் பிரதான வீதியில் கட்டுவதா?” என்று மிரட்டினர். அவ்வேளை அக்குடும்பத்தின் ஆறுபிள்ளைக்கு தாயனவாள் கையில் உலக்கையை எடுத்து, “துணிவிருந்தால் வாருங்கடா, நாங்கள் வீடு கட்டித்தான் தீருவோம் முடிந்தால் செய்யிறறைச் செய்யுங்கொடா", என கர்ஜித்தாள். 1914-ல் பள்ளர்-நளவர் வரணியிலும் தச்சர் பண்டத்திரிப்பிலும், தட்டார் தனக்காரக்குறிச்சிலும், பள்ளர் கெருடாவிலும்   வேளாளரை எதிர்த்து மோதலில்   ஈடுபட்டுள்ளனர். 1922-ல் பள்ளர் உரும்பிராயிலும், வண்ணார் சிவியார் தெருவிலும்; 1926-ல் நவளர் மூளாயிலும் வேளாளரை எதிர்த்து போராடியுள்ளனர். 1910-ம் ஆண்டின் ஆரம்பத்தில் சில தொழிற்ச்சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சாதி அமைப்பின் இறுக்கம் சாதி-தொழில் ரீதியில் அங்கத்தவர்களை பிளவடைய செய்தன. அதே சமயம் தமிழ் தேசியம் என்பது நாவலர் காலத்தில் கருக்கொண்டு பொன்னம்பலம் இராமநாதன் அருணாசலம் சகோதர்களால் முன்னெடுக்கப்பட்டு ஆரம்ப வளர்சி கண்டது. அத்தகைய தேசியம் உயர்வர்க்க மற்றும் உயர்சாதி தேசியமாகவே முன் சென்றது. இதே இராமநாதன் தான் தாழ்த்ப்பட்ட மக்களுக்கு இரயில் வண்டியில் தனிப்பெட்டி வேண்டும் என்று கேட்டவர். இந்தியாவில் இரயில்  போக்குவரத்து தொடங்கப்பட்ட போது தென்இந்திய இரயில் நிலைய உணவகங்களில் பார்ப்பனவர்கள் தங்களுக்கெனத் தனி இடங்கள் ஒதுக்கிக்கொண்டதும் இதைப்போலத்தான்

1920-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட யாழ்பாண மாணவர் காங்கிரஸ் (பின்பு யாழ்பாண வாலிபர் காங்கிரஸ் ) என்ற அமைப்பு முற்ப்போக்கு சமூகபார்வை கொண்டவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு தீண்டாமை எதிராக கடும் கண்டணக்குரல் கொடுத்தது. 1929-ல் இவ்வமைபின் 5வது மாநாட்டில் சம ஆசணம் சம போஜனம் என்ற உறுதியான நடவடிக்கைகளை வெற்றிகரமாக  மேற்க்கொண்டது. யாழ்பாண வாலிபர் காங்கிரஸின் சாதி எதிர்ப்பு நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாத சாதி வெறியர்கள் 1930-ல் காங்கிரஸின் 6-வது மாநாட்டில் பெறும் பிரச்சனை செய்து திருநெல்வெளியில் நடைபெற்ற மாநாட்டை யாழ் நகரத்திற்கு மாற்றசெய்தனர். 1927-ல் முதல் தாழ்த்ப்பட்டவர்களின் அமைப்பான தமிழ் ஊழியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1942-ல் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒர் முக்கியமான தீர்மானத்தின் படி 1943-ல் வட இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபை ஆரம்பிக்கப்பட்டு பின் 1944-ல் அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையாகியது. இந்த மகாசபையில் மிதவாதிகளின் கை ஓங்கியிருந்தாலும் அரசாங்க செயல்பாடுகளில் குறுக்கிடுவது குறுப்பிடும் படியாக இருந்தது. அதே சமயம் தாழ்த்ப்பட்ட சாதியினரில் படிநிலை உயர்வு தாள்வு பார்க்கும் மனநிலை மேலோங்கியோரும் ஒரளவு கல்வியறிவு பெற்றோரின் பதவி ஆசையின் காரணமாக மகாசபை பிளவுபட்டது.  

3 - 1950 முதல் 1966 அக்டோபர் 21 வரை 

சாதிய எதிர்ப்பு போரட்டங்களில் இது மிக மிக முக்கியமான காலகட்டம். தாழ்த்ப்பட்ட மக்களுடன் ஜனநாயக  முற்ப்போக்கு சத்திகள் இணைந்தகாலம்மகாசபையில் மிதவாதிகளின் கை ஓங்கியிருந்தாலும் போரட்ட குணம்கொண்ட இடதுசாரிகளும் இருக்கவே செய்தனர். சுயநல வாதிகளின் சுழ்ச்சியினால் மகாசபை பிளவுபட்டது. இச்சுயநலவாதிகள் மக்கள் முன்னெற்ற மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினர். இது தமிழ் அரசுக்கட்சியின் சுழ்ச்சியாகும். மக்கள் முன்னெற்ற மன்றம்  தமிழ் அரசுக்கட்சியின் கைப்பயாகவே இருந்தது. 1965-ம் ஆண்டு கால்ப்பகுதியில் தாழ்த்ப்பட்ட மக்களிடையே மகாசபையை தவிர பல்வேறு அமைப்புகளும் இருந்தன. இவ்வமைபுகளை ஒன்றினைத்து சிறுபான்மை தமிழர் ஐக்கிய முன்னனி ஆரம்பிக்கப்பட்டது. இம்முன்னனில் அனைத்து கட்சி மக்களும் இருந்ததாலும் போரட்ட குணம்கொண்ட கம்யூணிஸ்டுகளின் குரல் ஓங்கியியே இருந்தது. குறிப்பாக "சீன சார்பு" இடதுசாரிகளின் கை ஓங்கியியே இருந்தது. இப்புத்தகம் 1964-ல் இலங்கை கம்யூணிஸ்டு கட்சியில் ஏற்ப்பட்ட பிளவையும் அதற்க்கான காரணத்தையும் சுருக்கமாக குறிப்பிடுகிறது.இப்படிப்பட்ட கம்யூணிஸ்டுகளில் ஒருவரான வீ.. கந்நசாமி, “தாழ்த்ப்பட்ட மக்கள் ஒரு புரச்சிகரமான போரட்டத்தின் மூலமாகவே தங்களது உரிமைகளை வென்றுடுக்க முடியுமே தவிர வேறு சமாதான மார்க்கங்களில் எதையுமே சாதிக்க முடியாது" என வலியுறுத்தினார். கம்யூணிஸ்டு கட்சி "சீன சார்பு" 1966-ல் தாழ்த்ப்பட்ட மக்களை எதிர்நோக்கும் சாதிய தீண்டாமைக்கு எதிரான போரட்ட இயக்கத்தை கட்சியின் தலைமையில் தொடங்கிவைக்கும் வகையில் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் நடத்த வேண்டும் என தீர்மானித்தது. அதற்கான நாளாக 1966 அக்டோபர் 21 என அறிவிக்கப்பட்டது.  

4 - 1966 அக்டோபர் 21  ... 1966 க்கு பின்தைய நிலை

1966 அக்டோபர் 21, மாலை 5 மணிக்குசாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்”, என்ற கோஷத்துடன் துவங்கிய போணி யாழ் நகரை அதிரவைத்தது.காவல்துறை அனுமதி கொடுக்காவிட்டாலும் ஊர்வலம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பல போரட்டங்கள் நலத்தப்பட்டன. “அடிமை-குடிமை முறை ஒழியட்டும், ஆலைய தேனிர்க்கடை பிரவேசம் தொடரட்டும்", என்ற முழக்கத்துடன் ஆலைய தேனிர்க்கடை நழைவுப் போரட்டங்கள் நடைபெற்றனஇத்தேவை மற்றும் போரட்டங்களில் இருந்து உருவானதே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் (தீ..வெ.). தீ..வெ. இயக்கப் போரட்டங்களின் தாக்கத்தை இன்றும் தாழ்த்ப்பட்ட மக்களின் சமுக பொருளாதார வாழ்வில் காணலம். இத்தகையெ சாதியத்திற்க்கு எதிரான போரட்டங்களின் மிக முக்கியமான அம்சம் இப்போரட்ட்ங்களில் தாழ்த்ப்பட்ட மக்களோடு  இடதுசாரி ஜனநாயக முற்ப்போக்கு சத்திகளும்  தோளொடு தோள் நின்றதே ஆகும். உயர் சாதியினருக்கு எதிரான சாதிய போரட்டங்கள் எல்லாம் தேவைதான என்பது போல பொருளாதார வளர்ச்சி பெற்ற சில தாழ்த்ப்பட்ட மக்கள் தயங்கினாலும் சிலர் முகம் சுழித்தாலும்தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் மூலம் தாழ்த்ப்பட்ட மக்களும் இடதுசாரி ஜனநாயக முற்ப்போக்குவாதிகளும் சாதியத்திற்க்கும் சாதிய அட்க்கு முறைக்கும் எதிரான போரட்டங்களை தீர்க்கமாக நடத்தினர். இப்புத்தகம் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் போரட்டங்களையும் அதன் பின் 1970 களில் ஏற்ப்பட்ட மாற்றங்களையும் ஆழமாக பதிவுசெய்துள்ளது.

இலங்கையின் வரலாற்றை திராவிட இயக்கங்கள் மற்றும் பழ நெடுமாறன் மூலமாகவே கேட்ட மக்களுக்கு இப்புத்தகம் ஒரு புதுவித அனுபவம் தான்.

. கார்த்திகேயன்,  சான்டா  கிளரா, கலிபோர்னியா
மின்அஞ்சல் : iamsjkk@gmail.com



No comments: